Friday 19 March 2021

சார்பும் செயல்வீரனும்

தீக்கோழியின் சார்பு  (Ostrich bias)

நல்லவை மட்டும் கேட்டு, தீயவை கேட்கமருத்து, மறந்து, தன்னையே ஏமாற்றி அழியுமாம் தீக்கோழி.

தீக்கோழி என்று நினைத்து கூவிக் கூவி தன்வாயால் கெடுமாம் நுணல்.

அமைதிகாத்து, கேட்டறிந்து, கேட்காமலிருத்து அறம்காப்பவன் இறைந்து, கடந்தும் நிற்பவன்.

நங்கூரம் சார்பு (Anchoring bias)

முதலில் பாய்ந்த நங்கூரம் சராசரி என நினைத்து அதை சுற்றிவரும் பேதை மனம்.
நங்கூரம் பாய்த்து, சராசரியை மாற்றி, தன்னையும் ஏமாற்றும் மானுடம்.
வினைப்பயன் அறிந்து, விளைபயன் அறிந்து, பயன் பாதை சென்று, வென்றுவரும், கப்பலோட்டும் வீரன்.

உறுதி சார்பு (Confirmation bias)

எண்ண பிதற்றலை பிடித்து, அதை ஞாயதாராசில் இட்டு,
தான் நம்பியதை வைத்து உறுதிபட சமைக்குமாம் சார்பு, உறுதி சார்பு. 

உறுதி என நம்பி, வாதம் பல செய்ய, முடிவுறா பள்ளத்தில் உழல்வர் பலர்.

கேள்வி செல்வம் "எண்ணங்களின் மூலம்" அறிந்து, கேட்டலறித்து, தீர்வு காண்பான் மாவீரன்.

 

பின்புத்தி பேசல் சார்பு (Outcome bias)

பேதை மனம் பின்புத்தி பேசி, கேட்டலை மறுத்து, வீழுமாம்.

பின்புத்தி பேசி, சார்பு வழி சென்று, விதி பயன்  என எண்ணல், விளைபயன் அறியாதது.

இதனை இதனால் என அறிந்து பின்புத்தி வெல்லுமாம், கசடற அறிந்து விளைவு வழி செலல்.

நினைவு மனம் கடிதல் (Endowment Effect)

சோகம்தனை சூழ, ஆற்றல்தனை மறந்து தவித்திடும், நினைவு மனம்.
கார்மேகம்தனை சூழ, மழை வந்திடும் குறி அறியும், நினைவு மனம்.
மழை பொழிய வையம் செழிக்கும், சோகம் சூழ, விடிவும் பிறக்கும்
காலம் கடத்தி ஊக்கம் பெற்று, மனம் மலர்த்திடும் நினைவு மனம்.


Meditation and 5 L

Relaxation and Laughter distinguishes being human and human being . Relaxation is meditation. May be it is a lie, but a beautiful one, whic...