Sunday, 4 September 2022

7 suttru praman (7 வாக்குறுதி)

7 வாக்குறுதி 

ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்யும் பொழுது
ஒரு ஆண் ஒரு பெண்ணை  திருமணம் செய்யும் பொழுது
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் பொழுது

இதில் எது சரியான  பொழுது, உத்தமமான பொழுது? 

"ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் பொழுது" என்பது சத்தியம் தானா? எனவே அதற்கு அச்சாணியாக ஏழு நிபந்தனைகளை பெரியோர்கள் விதித்தனர்.

1. முதன் நிபந்தனை - எப்பொழுதும் வயதில் பெரியவர்கள் சிரியவர்களை பாதுகாப்பர், எனவே வயதில் முதியவனான ஆண் மகனை, இளையவளான பெண் மகளை குழந்தைகள் மற்றும் பெண் பெற்றோரை பாதுகாக்க பணித்தனர். அதற்க்கு சரி நிகராக அந்த பெண் ஆணின் உடலை பாதுகாத்து பேண, உணவு படைக்க, வீட்டை பராமரிக்க பணித்தனர்.

2. இரண்டாம் நிபந்தனை - அப்பாதுகாப்பு, ஆண் மகன் பெண்ணை எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க பணித்தனர். அதற்கு ஈடாக பெண் எல்லா மகிழ்வு இகழ்விலும் ஆணிற்க்கு துணையாக நிற்க பணித்தனர்.

3. மூன்றாம் நிபந்தனை  - ஆண்மகன் கடின உழைப்புடன் பொருள் சேர்க்க பணித்தனர், அவ்வாறு சேர்த்த பொருளை திட்டமிட்டு செலவு செய்து பெண்மகளை பேணி பாதுகாக்க பணித்தனர்.

4. நான்காம் நிபந்தனை  - வீட்டை பேணி பாதுகாக்க ஆண்மகன் தன் மனைவியின் முடிவுகளை மதிக்க பணித்தனர். அதற்கு நிகராக பெண்மகள் அவளுடைய கடமைகளை அவள் திறம்பட செவ்வனே செய்ய பணித்தனர். 

5. ஐந்தாம் நிபந்தனை - மணமகன் எல்லா முக்கிய செய்திகளை கலந்தாலோசிக்க பணித்தனர். அதற்கு நிகராக மணமகனை மணமகள் எல்லா செயல்களிலும் தன் ஆதரவை தருவிக்க பணித்தனர்.

6. ஆறாம் நிபந்தனை - ஆண்மகன் மணமகளை மட்டும் திருமண பெண்ணாக மனம் கொள்ள பணித்தனர். அதற்க்கு ஈடாக மணமகள் மணமகனை மட்டுமே திருமண ஆணாக மனம் கொள்ள பணித்தனர். 

7. ஏழாம் நிபந்தனை - ஆண்மகன் மணமகளை மட்டும் திருமண பெண்ணாக மனம் கொண்டு அவள் மீது இருக்கும் நம்பிக்கை கோணாமல் இருக்க பணித்தனர். அதற்க்கு ஈடாக மணமகள் மணமகனை மட்டுமே திருமண ஆணாக மனம் கொண்டு அவனை தொடர்ந்து அவனுடன் இருத்து அவனுடன் துணையாக இருக்க பணித்தனர்.

ஆண்மகளும் பெண்மகளும் வீடு எனும் தேரை, ஏழு நிபந்தனைகள் எனும் அச்சாணிகள் கொண்டு கருவில் உள்ள தெய்வத்தை சுற்றி வர என் வாழ்த்துக்கள்.

https://zeenews.india.com/spirituality/know-what-saat-phere-in-hindu-weddings-symbolise-and-mean-1917245.html

Skill, Knowledge and Talent

I kept overwhelming with data, information, knowledge and wisdom over a period of time. And I really wanted to lean towards skilling on few ...