Saturday, 12 June 2021

ஆயிரம் காலம் பயிர் திருமணம்

ஆயிரம் காலம் பயிர் திருமணம்

கொரோனா இரண்டாம் அலை மெல்ல தொய்வுற்று தெரிவதால் பலர் திருமண நிகழ்வுகள் நடத்த முற்படுகின்றனர். பலர் பங்கு கொள்ளவும் விரும்புகிறார்கள்.

இன்னும் இந்த தொற்றின் தீவிரம் குறையவில்லை எனும் எண்ணத்துடனும், கவனத்துடனும் செயல்படுங்கள். தடுப்பூசி 5% முதல் 15% மட்டுமே எடுத்துக்கொள்ள பட்டதாக தெரிகிறது. நோய்வாய் படுவோர், குணமாவோர் எண்ணிக்கையை, அரசு ஏழை மக்கள் நல்வாழ்விற்காக செய்யும் தளர்வுகள் மட்டும் கருத்தில் கொண்டு உங்கள் கவசத்தை கீழிறக்க வேண்டாம்.

கொரோனா தொற்று காலத்தில், மிகுந்த சிரமத்துடன் கூடி வரும் வரன்களை பெற்றோர் சேர்ப்பதில் அதிக கவனம், உழைப்பு வேண்டியுள்ளது.

திருமணம் அல்லது மரணம் போன்ற நிகழ்வுகளில் நம் விட்ட குறை, தொட்ட குறை என யாவையும் சரி செய்ய முயல்கிறோம், இது தான் அதற்க்கு காரணம் என எண்ண தோன்றுகிறது.


திருமணம் நடத்துவோர் அல்லது நடத்த முற்படுவோர் கவனத்திற்கு

1. முடிந்த அளவிற்கு தொற்று நோய் பாதிப்பு குறைந்த பின்னே, மருத்துவமனைகளில் கூட்டம் ஓய்ந்த பின்னே  நடத்தவும்.

திருமணம் சம்பந்தத்தாரர்கள் முடிவு எடுப்பது கடினம் எனினும் சிரமம் பார்க்காமல் உழைப்பை சிந்தி யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் ஆராய்ந்து அறிந்து முடிவு எடுப்பது நல்லது.

2. முடிந்த அளவிற்கு கூட்டத்தை குறைத்தே நடத்த வேண்டும்

அணைத்து உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் முன் நடத்த வேண்டும் எனும் ஆவலுடன் இருக்கத்தான் "நம் மனம்" நாடும். ஒன்று, இரண்டு என நூறு பேரை சேர்க்கும். கூட்டத்தின் நடுவே நடந்தால் தான் திருமணம் சிறக்கும், பந்தல், மேளம், போட்டோக்ராபர் இருந்தால் தான் நம் பிள்ளைகள் மணம் நல்வாழ்வாக அமையும் என்ற எண்ணம் பிறக்கும்.

நீங்கள் உங்களை மட்டும் இல்லாமல் மற்றவர்களை தொற்றுக்கு தள்ளுகிறீர்கள்.

திருமண பெண், ஆண், பெற்றோர், ஒரு சுற்று உறவினர்கள் இருந்தால் மட்டும் போதும். இன்றைய காலத்தில் ஒரு சுற்று உறவினர்களிடமும் வீராப்புடன் சண்டையிட்டு விடுகிறோம்.

ஒரு திருமணம் அல்லது ஒரு மரணத்திற்கு தான் நம் விட்ட குறை, தொட்ட குறை என யாவையும் சரி செய்ய முயல்கிறோம். அன்புடன் ஒரு சுற்று உறவினர்களை அவர்கள் மனம் ஏற்கும் அளவிற்கு சிரமம் பாராமல் அழைப்பது நல்லது.

மற்ற உறவினர்கள், நண்பர்களிடம் , அண்டை வீட்டாரிடம் திருமணம் தகவல் கூறி "வர வேண்டாம்" என்று சொல்வதே நல்லது. நம் மனம் அவர்கள் தக்க சமயத்தில் செய்த உதவி நினைத்து வருந்தும்.

கொரோனா பாதிப்பு  இனி இல்லை எனும் காலம் வெகுதொலைவில் இல்லை, கட்டாயம் இரண்டாம் முறை அனைவரையும் அழைத்து நீங்கள் எண்ணியது போல் ஒரு வரவேற்பை உங்களால் கொடுத்திட முடியும், உங்கள் மக்களை அதற்கான பக்குவத்துடன் சான்றோர் நல்லாசி பெற தயார் செய்து கொண்டிருப்பது நல்லது. மற்ற உறவினர்கள், நண்பர்களிடம் , அண்டை வீட்டாரிடம் இந்த விவரத்தை சொல்லிவிடுவதும் நல்லது. சண்டையிட்டு பிரிந்து நிற்கும் உறவுகளை அழைப்பதற்கு இரண்டாம் வாய்ப்பாக அமையும்.

3. பிள்ளைகள் வயதையும், பருவத்தையும் உணர்ந்து காலாகாலத்தில் அவர்களின் திருமணம் முடிக்க துடிக்கும் பெற்றோர்களே. நீங்கள் உணர்ச்சி வசம் படும்போது, அருகாமையில் தக்க துணை ஒருவரை தேடி கொள்ளுங்கள்.

4. கூட்டம் குறைவாய் இருப்பின் திருமண தம்பதிகளை நோய் தொற்று தாக்காது என அமைதி கொள்வீர்கள்.

நம் பிள்ளைகளை பலியிட நாம் திருமணம் செய்வதில்லை.

5. நாம் கூட்டம் குறைவாக சேர்க்க வேண்டும் எனும் எண்ணத்துடன் சிரமம் மேற்கொள்வோம், மற்றவை தானாக நடக்கும்.

திருமணதிற்கு செல்வோர் / செல்ல முற்படுவோர் கவனத்திற்கு

1. மிக மிக நெருக்கமான "ஒன்றாம் சுற்று" உறவினர்களின் திருமணத்தை தவிர வேறு எல்ல திருமண நிகழ்வுகளையும் தவிர்ப்பது நல்லது. ஒன்றாம் சுற்று உறவினர்கள், திருமணம் புரியும் குடும்பத்துடன் தக்க காலம் கருதி தொற்று இல்லாத நேரம் என உள்ளுணர்ந்து, சேர்ந்து நின்று, நல்வழி நல்குவது உங்கள் கடமை.

2. திருமணம் புரியும் குடும்பம் எல்லா வித நோய் தொற்று பாதுகாப்பை (தடுப்பூசி முதல் முகக்கவசம் வரை) உறுதி செய்துள்ளார்களா என அறிந்து, செய்யாதவற்றை சீற்றம் தவிர்த்து செய்வது நீங்கள் செய்யும் பேருதவி.

3. குழந்தைகள், கர்பிணிகள், முதியவர்கள், இவர்களுக்கு உதவி புரிபவர்கள் எந்த திருமணத்திற்கும் செல்லாமல் இருப்பது தவறில்லை, அதுதான் சரி.

4.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இந்த திருக்குறள், உங்களை, உங்கள் மனதை அனைவரின் திருமணத்திற்கு செல்ல வாட்டும். அண்டை வீட்டார் அழைத்தார், நண்பர்கள் அழைத்தார்கள், அவர்கள் அழைத்து "வர வேண்டாம்" என சொல்லத்தான் செய்வார்கள் ஆனால் போவது நம் கடமை என எண்ணத்தோன்றும்

ஒரு குடும்பம் எனும் கூட்டத்தில் வாழும் மனிதனனுக்கு பல கடமைகள் உள்ளது, ஒரு நன்றியையும், கடனையும் கருதி நம்மை நம்பி வாழும் பலரிடம் செலுத்திட வேண்டிய நன்றியையும், செய்ய வேண்டிய கடமையையும் மறுத்து, மறந்து விடுவது சால சிறந்த செயல் அல்ல.

ஒன்றை சரி செய்ய, பல தவறுகள் செய்து விடும் வகையில் அமையும் காலம் இது.

5. வீட்டில் சண்டை, சச்சரவு, பல காலமாக அடைந்து கிடக்கும் குமுறல் என மனதை இறுக்கிக்கொள்ளும் எண்ணத்தை விட்டு மலர்த்திடுங்கள்.

மனம் தாளாமல், ஒரு தவிர்க்க வேண்டிய திருமணத்திற்கு செல்ல தோன்றினால்.
வீட்டார் மனம் ஏற்ப அனுமதி கோருங்கள்.
முகமூடி, முக கவசம், சானிடைசர், சோப்பு என அணைத்து பாதுகாப்பினையும் உறுதி செய்யுங்கள்.
இரண்டு நாள், ஒரு வாரம் நேரம் எடுத்து உங்கள் உடலையும், மனதையும் "சாகசத்திற்கு" தயார் செய்யுங்கள்.

"சாகசம்" வாழ்கை என எண்ண வேண்டாம். தற்போது உள்ள காலம் வாழ்க்கையை "சாகசமாக்கிவிட்டது".

எல்லா வேற்றுமைகளை மறப்பதற்கு திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளில் தான் தீர்வு என்றில்லை. இந்த கணம், இந்த நொடி அனைவரையும் மன்னித்து மறந்து, அன்புடன், அறவழி செல்வோம், இயல்தகு, இசைந்திட கூடி வாழ்வோம்.

No comments:

Post a Comment

Skill, Knowledge and Talent

I kept overwhelming with data, information, knowledge and wisdom over a period of time. And I really wanted to lean towards skilling on few ...